| ADDED : நவ 27, 2025 02:35 AM
கோவை: சிங்காநல்லுார் நாயக்கர் வீதியை சேர்ந்தவர் மணிராவ், 21; பெட்ரோல் பங்க் ஊழியர். பைக்கில் பெட்ரோல் நிரப்ப வந்த இருவர், பெட்ரோல் நிரப்பும் எந்திரத்தின் அருகில் வண்டியை நிறுத்தினர். வளாகத்தில் போன் பேசுவது தொடர்பாக, மணிராவுக்கும் பைக்கில் வந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்கள் மணிராவை மிரட்டி சென்றனர். சிறிது நேரம் கழித்து மணிராவ், வசூல் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தபோது, இருவரும் மீண்டும் வந்தனர். அரிவாளை காட்டி மிரட்டி, வசூல் பணம் ரூ.11 ஆயிரத்தை பறிக்க முயன்றனர். சத்தம் கேட்டு பிற ஊழியர்கள் வந்ததால் தப்பினர். புகாரின் பேரில் வழக்கு பதிந்த பீளமேடு போலீசா ர் விசாரணையில், சவுரிபாளையத்தில் குடியிருந்து வரும் ஈரோடு மாவட்டம் ரயில்வே காலனியை சேர்ந்த மணிகண்டன், 25, சவுரிபாளையத்தை சேர்ந்த சிவகாசி, 24 ஆகியோர் என தெரிந்தது. மணிகண்டனை சிறையில் அடைத்த போலீசார், சிவகாசியை தேடி வருகின்றனர்.