உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொலை முயற்சி, கொள்ளை வழக்குகள்; கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றம்

கொலை முயற்சி, கொள்ளை வழக்குகள்; கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றம்

கோவை; பி.என்.எஸ்., குற்றவியல் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் கொலை முயற்சி, கொள்ளை வழக்குகள், கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டிற்கு மாற்றப்படுகிறது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றம் மற்றும் ஐந்து கூடுதல் நீதிமன்றங்கள் செயல்படுகிறது. சார்பு நீதிமன்றங்களில் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் விசாரிக்கப்படுகிறது. கிரிமினல் வழக்குகளில், மாநகர எல்லைக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், கொலைமுயற்சி, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட, இந்திய தண்டனை சட்டப்பிரிவின் கீழ் பதிவாகும் வழக்குகள், சார்பு கோர்ட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. இந்த சட்டப்பிரிவின் கீழ் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மத்திய அரசு, கடந்த 2024, ஜூலை முதல் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்த பிறகு, பல நீதிமன்றங்களில் அதிகார வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சார்பு நீதிமன்றங்களில், புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் கொலை முயற்சி, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள், மாவட்ட கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறும். இந்திய தண்டனை சட்டத்தின் கீழ், 2024, ஜூன் வரை தாக்கல் செய்யப்பட்ட நிலுவை வழக்குகள் மட்டும் சார்பு நீதிமன்றங்களில் விசாரணை நடத்தப்படும். பிறகு,சார்பு நீதிமன்றங்களில், சிவில் வழக்கு விசாரணை மட்டும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி