உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் வரை கவனம்

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் வரை கவனம்

சோமனுார்: ''வாக்காளர் தீவிர திருத்தப் பணியில், பூத் ஏஜென்ட்கள் மக்களுக்கு உதவ வேண்டும்,'' என, பா.ஜ., மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் பேசினார். சூலுார் சட்டசபை தொகுதி பா.ஜ., பூத் ஏஜென்ட்களுக்கான பயிற்சி முகாம், சோமனுார் அடுத்த தொட்டிபாளையத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். பா.ஜ., மாநில அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம் பேசியதாவது: வரும் சட்டசபை தேர்தல் முக்கியமானது. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பணிபுரிய வேண்டும். அதற்கு முன், வாக்காளர் தீவிர திருத்தப்பணியில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று, படிவங்களை வழங்கி வருகின்றனர். வாக்காளர்களுக்கு படிவங்களை பூர்த்தி செய்ய உதவ வேண்டும். அவர்களின் சந்தேகங்களை போக்க வேண்டும். அந்த வீட்டில், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் உள்ளனரா என அறிந்து, அவர்களின் பெயரை பட்டியலில் சேர்க்க உதவ வேண்டும். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பின், அதை ஆய்வு செய்து, தகுதியான வாக்காளர்களும் இடம் பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும். விடுபட்டவர்களை சேர்க்க உதவி செய்ய வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் வரை இப்பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ