உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்

பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்

- நமது நிருபர் -கோவை மாவட்ட போலீசாரால் பறிமுதல் செய்த வாகனங்களுக்கான பொது ஏலம், அவிநாசி சாலையில் உள்ள பி.ஆர்.எஸ்., மைதானத்தில் வரும், 23ம் தேதி நடக்கிறது.கோவைமாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'கோவை மாவட்ட போலீசாரால், மதுவிலக்கு குற்றங்களில் கைப்பற்றப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட மூன்று கனரக வாகனங்கள், ஏழு நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 62 இருசக்கர வாகனங்கள் என மொத்தம், 72 வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. வாகனங்களை ஏலம் எடுத்தவுடன், முழுத்தொகை மற்றும் ஜி.எஸ்.டி., தொகையை ரொக்கமாக செலுத்தி, வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம்' என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !