உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மலையடிவாரத்தில் கால்நடை மேய்ச்சலை தவிர்க்கவும்

மலையடிவாரத்தில் கால்நடை மேய்ச்சலை தவிர்க்கவும்

கோவை; கோவை, வேளாண் பல்கலையில் அமைந்துள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:வரும் நாட்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும். வரும் மழையை எதிர்பார்த்து, ஈரப்பதத்தைப் பொறுத்து, கம்பு, காய்கறிகள், மலர் சாகுபடி செய்யலாம். மரவள்ளி நடவு செய்யலாம். மேற்குத் தொடர்ச்சி மலையோரப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், மலையடிவாரப் பகுதிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதைத் தவிர்க்க வேண்டும். அறுவடை முடிந்த வயல்களில், சரிவுக்கு குறுக்காக உழவு செய்து, மழை நீரை வயல்களில் தேக்க லாம். மண்சரிவைத் தடுக்கலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை