உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆர்.டி.எப். சார்பில் விருது வழங்கும் விழா

ஆர்.டி.எப். சார்பில் விருது வழங்கும் விழா

கோவை; மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், 2025-2026ம் ஆண்டுக்கான தலைவராக, ஜெயபால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். பொது செயலாளராக, ராஜபாளையம் அர்ஜுனா டெக்ஸ்டைல் சீதாராமராஜா, உப தலைவராக உடுமலை கவிதா டெக்ஸ்டைல் குரூப் மனோகர், துணைத் தலைவர்களாக சூர்ய பாலாஜி மில்ஸ் சிவகுமார், பல்லடம் கிருஷ்ணா டெக்ஸ்டைல்ஸ் சத்தியசீலன், உடுமலை ஸ்ரீஹரி டெக்ஸ்டைல் ரமேஷ், ஆண்டாள் மில்ஸ் ரகுபதி, பொருளாளராக பாலாஜி பொறுப்பேற்றனர். தொடர்ந்து, மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின், 3வது துறைசார் விருது வழங்கும் விழா நடந்தது. துறை சாதனையாளர் விருது குமரகுரு மில்ஸ் தலைவர் அனுஸ்ராமசாமிக்கு வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. ஐ.சி.எப்., தலைவர் துளசிதரன், சிட்டி பருத்தி கமிட்டி தலைவர் ராஜ்குமார், சைமா முன்னாள் தலைவர் சுந்தரராமன், சிஸ்பா செயலாளர் ஜெகதீஸ் சந்திரன், எல்.ஜி., பெல்ட் நிர்வாக இயக்குனர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று விருது வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை