மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு மேட்டுப்பாளையத்தில், அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில், அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து ஒருங்கிணைந்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பொள்ளாச்சி அருகே மேட்டுப்பாளையத்தில் நடந்தது. எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன், அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைத்ததுடன், மாணவர்களிடம், 'பெற்றோரை தெய்வமாக மதித்து போற்றி வணங்க வேண்டும்,' என வலியுறுத்தினார். தொடர்ந்து, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.ஒன்றிய செயலாளர் திருஞானசம்பந்தம், மாவட்ட இளைஞர் பாசறை இணை செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள், அதிகாரிகள் பங்கேற்றனர்.