மேலும் செய்திகள்
என்.எஸ்.எஸ். முகாம்; மாணவர்கள் துாய்மை பணி
30-Sep-2025
கோவை: பள்ளி மாணவர்களிடம் புகையிலை பயன்பாட்டை தடுக்கும் நோக்கில், மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை இணைந்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. வாரத்திற்கு ஆறு பள்ளிகள் என நிர்ணயிக்கப்பட்டு, தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமார் 850 பள்ளிகளில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நலம் சார்ந்த பாதிப்புகள் குறித்து,'பவர் பாயின்ட்' மற்றும் காட்சிப் படங்கள் மூலம் புகையிலை பயன்பாட்டின் தீமை விரிவாக எடுத்துரைக்கப்படுகிறது. மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையத்தின் துணை இயக்குனர் சரண்யா கூறுகையில், “மாணவர்கள் புகையிலைப் பழக்கத்தில் சிக்காமல் இருக்க, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியம். தேவையெனில், உளவியல் ஆலோசனையும் வழங்கப்படுகிறது,” என்றார். மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும், இத்தகைய விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
30-Sep-2025