உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மின்னணு ஓட்டுப்பதிவு மாணவர்களுக்கு விழிப்புணர்வு

 மின்னணு ஓட்டுப்பதிவு மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, தாளக்கரை டி.நல்லிக்கவுண்டன்பாளையம் பள்ளி மாணவர்களிடம், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொள்ளாச்சி, தாளக்கரை டி.நல்லிக்கவுண்டன்பாளையத்துக்கு வந்த இந்திய தேர்தல் ஆணையத்தின், கோவை மாவட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர செயல்முறை விளக்க நடமாடும் விழிப்புணர்வு வாகனம் வாயிலாக, பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொதுமக்கள் எவ்வாறு ஓட்டுப்பதிவு செய்கின்றனர் என்பதையும், சமூக அறிவியல், குடிமையியலில் உள்ள மக்களாட்சி என்ற பாடம் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், 6, 7, 8 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. ஆசிரியர்கள் சவுந்திரபாண்டியன், பழனிக்குமார், கிராம நிர்வாக அலுவலர் சுகந்தி, பள்ளி மேலாண்மைகுழுவினர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி