மேலும் செய்திகள்
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு புத்தகம்
18-Nov-2024
கோவை; 'செல்வமகள்' திட்டம் தொடர்பாக, பள்ளிகளில் மேற்கொண்டு வரும் விழிப்புணர்வால், குழந்தைகள் பலர் இணைந்து வருகின்றனர்.பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யவும், மத்திய அரசால் துவங்கப்பட்ட 'சுகன்யா சம்ரித்தி யோஜனா' எனும் செல்வமகள் திட்டம், பெரும் வரவேற்பு பெற்று, இதில் கணக்கு துவங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதில், தமிழ்நாடு வட்டம் எட்டாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. தபால் நிலையம், வங்கியில், இதில் பலர் கணக்கு துவங்கி வரும் நிலையில், தபால் துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலை தொடர்ந்து, துவக்கத்தில் இருந்து பள்ளிகளில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, கோவை கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில், வட்டாரத்துக்கு உட்பட்ட ப்ரீ கே.ஜி., பள்ளிகள், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு, அப்பகுதி போஸ்ட் மாஸ்டர், போஸ்ட் மேன்கள் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பலர் இத்திட்டத்தில் இணைந்தனர். தொடரும் இதுபோன்ற விழிப்புணர்வால், இத்திட்டத்தில் இணைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
18-Nov-2024