உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி, கல்லுாரி முன் விழிப்புணர்வு வாசகம்

பள்ளி, கல்லுாரி முன் விழிப்புணர்வு வாசகம்

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் முன்பாக, புகையிலை பயன்படுத்த தடை என வாசகம் எழுதப்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் முன்பாக 'புகையிலை தடை செய்யப்பட்ட பகுதி' என்ற வாசகம் ரோட்டில் வண்ணம் தீட்ட அரசு அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து, கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி முன்பாக, ரோட்டில் விழிப்புணர்வு வாசகம் எழுதப்பட்டுள்ளது. இது குறித்து, நல்லட்டிபாளையம் வட்டார மருத்துவ அலுவலர் விக்னேஷ் கூறுகையில், ''மாவட்ட சுகாதார அலுவலர் அறிவுறுத்தல் படி, பள்ளி மற்றும் கல்லூரி முன்பாக, 'புகையிலை தடை செய்யப்பட்ட பகுதி', என வாசகம் எழுதப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் மற்றும் மக்கள் நலன் கருதி புகையிலை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், இந்த வாசகம் எழுதப்பட்ட இடத்தில் இருந்து 300 அடி தொலைவுக்குள் கடைகளில் புகையிலை பொருட்கள் உபயோகிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !