உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சமையல் எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு

சமையல் எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு

உடுமலை, ;உடுமலையில், சமையல் எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.உடுமலை, செல்வி காஸ் நிறுவனம் மற்றும் நேசக்கரங்கள் அமைப்பின் சார்பில், சமையல் எரிவாயு சிக்கனம், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.முகாமில், காஸ் நிறுவன உரிமையாளர் அய்யப்பன் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் சதீஷ்குமார், எரிவாயு பாதுகாப்பு குறித்து பேசினார்.சிலிண்டர் வைக்கப்படும் அறை காற்றோட்டமாக இருக்க வேண்டும், எரிவாயு பயன்படுத்தாத சமயத்தில் அணைத்து வைக்க வேண்டும், ஐந்து ஆண்டு உத்தரவாதம் உள்ள குழாய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். காஸ் கசிவு ஏற்பட்டாமல் உடனடியாக ரெகுலேட்டரை அணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ