உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மழை நீர் சேமிக்க விழிப்புணர்வு

மழை நீர் சேமிக்க விழிப்புணர்வு

கிணத்துக்கடவு: சொக்கனூரில் அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்கள், மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கிணத்துக்கடவு, அரசம்பாளையம் அமிர்தா வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்டத்தின் ஒரு பகுதியாக, சொக்கனூரில் மழைநீர் சேகரிப்பு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தண்ணீர் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் மழை நீரை நிலையான முறையில் மேலாண்மை செய்வது குறித்து விவசாயிகளிடம் விளக்கம் அளித்தனர். மேலும், நீர் வளங்களை பாதுகாப்பது, நிலத்தடி நீரை மேம்படுத்துவது மற்றும் நீர் பற்றாக்குறையை சமாளிப்பதில் மழைநீரின் பங்கு, சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசன முறைகளை கையாளுதல் குறித்து தெரிவித்தனர். தொடர்ந்து அரசு மானிய திட்டங்கள் பற்றி விரிவாக தெரிவிக்கப்பட்டது. கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !