உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தியான நிலையத்தினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தியான நிலையத்தினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வால்பாறை; வால்பாறை பிரஜா பிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்தியாலயம், ராஜயோக தியான நிலையத்தின் சார்பில், புத்தாண்டு தினத்தையொட்டி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பிரம்மாகுமாரிகள் அமைப்பின் வால்பாறை பொறுப்பாளர் கற்பகம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மொபைல்போனில் பேசியபடி செல்வதால் ஏற்படும் பாதிப்புகள், அதிவேகமாக செல்லும் வாகனங்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நிகழ்ச்சியில், வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, தி.மு.க., நகர செயலாளர் சுதாகர், தொழிற்சங்க தலைவர் சவுந்திரபாண்டியன் மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பிரம்மாகுமாரிகள் அமைப்பின் சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை