போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
பெ.நா.பாளையம்; தடாகம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தடாகம் போலீசார் மற்றும் அவினாசிலிங்கம் கல்லூரி ஆகியன இணைந்து சோமையனூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. பேரணியில் பங்கேற்ற மாணவியர், கைகளில் போதை பொருள் ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி சென்றனர்.நிகழ்ச்சியில், தடாகம் எஸ்.ஐ., அய்யாசாமி, முருகேசன், அவினாசிலிங்கம் கல்லுாரி ஆசிரியர் ஜெப ஸ்வீட்லி, அபிநயா, நஞ்சுண்டாபுரம் ஊராட்சி செயலாளர் ஈஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.