மேலும் செய்திகள்
விழிப்புணர்வு நிகழ்ச்சி
31-Aug-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி ரோட்டரி கிளப் சார்பில், சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ரோட்டரி கிளப் தலைவர் சதீஷ்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தார். கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு பிரிவு அலுவலர் முரளிகிருஷ்ணன் பங்கேற்று பேசினார். நிகழ்ச்சியில், மது மற்றும் போதை பொருட்கள், உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.போதை மற்றும் குடிப்பழக்கம் உடையவர்கள் செய்யும் குற்றச் செயல்களால், குடும்பத்தினர் பாதிப்படைவர். எதிர்காலம் சிறக்க வேண்டுமெனில், தீய பழக்கங்களில் ஈடுபடக் கூடாது என, தெரிவிக்கப்பட்டது. போதைப்பொருள் பயன்பாட்டை தவிர்க்க, மாணவர்கள் ஒன்றிணைந்து உறுதிமொழியும் ஏற்றுக் கொண்டனர்.
31-Aug-2025