உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஐ.சி.சி., குழு அமைக்க விழிப்புணர்வு

ஐ.சி.சி., குழு அமைக்க விழிப்புணர்வு

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகையில் உள்ள நிறுவனங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக ஐ.சி.சி., குழு அமைக்க தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமாரின் அறிவுரைபடி, மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 'பொஷ்' சட்டத்தின் கீழ் உள்ளகக் புகார் குழு அதாவது ஐ.சி.சி.,குழு அமைக்கப்பட வேண்டும் என கோவை மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) தெரிவித்திருந்தார்.அதன்படி, மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, உள்ளிட்ட பகுதிகளில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், அனைத்து நிறுவனங்களிலும் ஐ.சி.சி., குழு அமைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், விழிப்புணர்வு ஏற்படுத்திய இடத்தில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்து வருகின்றனர்.இதுகுறித்து, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், இக்குழுவில் பணியாளர்களில் இருந்து உயர் மட்டத்தில் பணியமர்த்தப்பட்ட ஒரு பெண் தலைமை அதிகாரி இருத்தல் வேண்டும். பெண்கள் நலனுக்காக முன்னுரிமை அளிக்கப்படும் அல்லது சமூகப் பணியில் அனுபவம் உள்ளவர்கள் அல்லது சட்ட அறிவு உள்ள ஊழியர்களில் இருவருக்குக் குறையாத உறுப்பினர்கள் இருத்தல் வேண்டும்.பெண்கள் அல்லது பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பிரச்னைகளை நன்கு அறிந்த ஒரு நபர் அல்லது அரசு சாரா நிறுவனங்கள் அல்லது சங்கங்களில் இருந்து ஒரு உறுப்பினர். மேலும் இக்குழு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட வேண்டும். இக்குழு அமைக்கப்படவில்லை என்ற விவரம் ஆய்வின்போது கண்டறியப்பட்டால் கோவை மாவட்ட கலெக்டரால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், பெண்கள் புகார் அளிக்க வசதியாக அனைத்து நிறுவனங்களிலும் புகார் பெட்டி வைக்க வேண்டும். இப்புகார் பெட்டி கேமராக்கள் இல்லாத இடத்தில் தான் வைக்க வேண்டும் என்றனர்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ