உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நொய்யலில் குப்பை, கழிவு தடுக்க விழிப்புணர்வு

நொய்யலில் குப்பை, கழிவு தடுக்க விழிப்புணர்வு

சோமனுார்; நொய்யல் ஆற்றில் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டுவதை தடுக்கும் வகையில் விவசாய அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நொய்யல் ஆறு மற்றும் நீர் நிலைகளில் குப்பை, கட்டட கழிவுகள் கொட்டுவது அதிகரித்துள்ளது. இதனால், நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் நொய்யல் ஆற்றை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றன. தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் திருஞானசம்பந்தம் கூறுகையில், ''நொய்யல் ஆற்றில் கழிவுகள் கொட்டப்படுவதால், மாசடைந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆற்றை மீட்க அனைவரும் ஒன்றிணைய வேண்டியது அவசியம். பல விவசாய அமைப்புகள், தன்னார்வலர்கள், நொய்யல் படுகை விவசாயிகள் ஆகியோருடன் சேர்ந்து, கழிவுகளின் பிடியில் இருந்து நொய்யல் ஆற்றை மீட்கும் முயற்சியில் இறங்கி உள்ளோம். ஒவ்வோரு கிராமம் கிராமமாக சென்று மக்களிடையே நொய்யலை காப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை