உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தினசரி மார்க்கெட்டில் வாழை வரத்து குறைவு

தினசரி மார்க்கெட்டில் வாழை வரத்து குறைவு

கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், பண்டிகையை யொட்டி வாழைத்தார் மற்றும் பிற காய்கள் வரத்து குறைவாகவே இருந்தது.கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் தினமும் காய்கள் மற்றும் வாழைத்தார் வரத்து அதிகமாக இருக்கும். ஆனால் நேற்றைய தினம் பொங்கல் பண்டிகையையொட்டி காய்கள் மற்றும் வாழைத்தார் வரத்து வழக்கத்தை விட குறைவாகவே இருந்தது.இதில், வழக்கமாக, 200கும் மேற்பட்ட வாழைத்தார்கள் வரத்து இருக்கும். ஆனால் நேற்றைய தினமோ சாம்பிராணி வகை வாழைத்தார் 10 மட்டுமே வரத்து இருந்தது. ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை ஆனது. மற்ற வகை வாழைத்தார்கள் வரத்து இல்லை.மேலும், தக்காளி (15 கிலோ பெட்டி) 210 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகளுக்கு போதிய அளவு லாபம் கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ளனர்.வியாபாரிகள் கூறுகையில், 'ஆண்டு தோறும் பண்டிகை காலங்களில் காய்கள் வரத்து குறைவாக இருக்கும். ஆனால் தற்போது விலையும் குறைந்துள்ளது. குறிப்பாக தக்காளி விலை மிகவும் சரிந்துள்ளது. நேற்றைய தினம் வரத்து குறைவாக இருந்த போதிலும், விலை அதிகரிக்கவில்லை'. என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ