உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்த வங்கி ஊழியர்

அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்த வங்கி ஊழியர்

கோவை; ஆன்லைன் டிரேடிங்கில் அதிக லாபம் தருவதாக கூறியதை நம்பி, வங்கி ஊழியர் ரூ. 9.20 லட்சத்தை இழந்தார்.கோவை, சரவணம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக், 33; தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். கடந்த டிச., மாதம் இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு, ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், 'சூனியா செக்யூரிட்டிஸ்' வாயிலாக, ஆன்லைன் டிரேடிங் செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என தெரிவித்துள்ளார்.அதற்கான 'லிங்க்' அனுப்பினார். கார்த்திக் அதை பதிவிறக்கம் செய்து, ஆன்லைன் டிரேடிங் செய்ய துவங்கினார். கடந்த டிச., 16ம் தேதி முதல் கடந்த பிப்., 5ம் தேதி வரை, பல்வேறு தவணைகளில் 9.20 லட்சம் ரூபாய் முதலீடு செய்து, டிரேடிங் செய்து வந்தார். கிடைத்த லாபத்தை கார்த்திக் எடுக்க முயன்ற போது, மேலும் பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். பலமுறை முயற்சி செய்தும், பணத்தை வங்கி கணக்குக்கு மாற்ற முடியவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி