உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அடிப்படை வசதியில்லை ஆனாலும் சாதித்தார்கள்

அடிப்படை வசதியில்லை ஆனாலும் சாதித்தார்கள்

கோவை: முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில், கோவை மாவட்டம் மூன்றாம் இடம் பிடித்தது. இதில் வெற்றி பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் நேற்று மேயர் ரங்கநாயகி, கமிஷனர் ரவி தேஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஜூடோ, கேரம் போட்டிகளில் வென்ற பல்வேறு பள்ளி மாணவர்கள் வந்திருந்தனர். அனுப்பர்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் முபாரிஷ், 73 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கம் பெற்றுள்ளார். இவர் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். பீளமேடு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பரணிதரன், அரவிந்த் இருவர் பிரிவில் இரண்டாமிடம் பிடித்தனர். கோட்டைமேடு, ஆர்.எஸ்.புரம் பள்ளி மாணவர்களும் ஜூடோவில் வென்றுள்ளனர். மாணவர்கள் கூறுகையில், மாநகராட்சி பள்ளிகளில் 70க்கும் மேற்பட்டோர் பயிற்சி எடுக்கிறோம். பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ளோம். பயிற்சிக்கு போதிய இடவசதி இல்லை. ஜூடோ மேட் கூட இல்லை. முன்னாள் மாணவர்கள் தான் பயிற்சி கொடுக்கிறார்கள். பயிற்சிக்கான இடவசதி, மேட் போன்ற வசதிகளை செய்து தர வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !