உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூடைப்பந்து: மாணவ, மாணவிகள் அசத்தல்

கூடைப்பந்து: மாணவ, மாணவிகள் அசத்தல்

கோவை ; கூடைப்பந்து போட்டிகளில் மாணவ - மாணவிகள் அசத்தினர்.கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி., சர்வஜன பள்ளி சார்பில் மாணவர்களுக்கு, 47வது மாநில அளவிளான கூடைப்பந்து போட்டிகளும், மாணவிகளுக்கு, 2வது மாவட்ட அளவிளான கூடைப்பந்து போட்டிகளும் நடைபெற்றன.பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் நடந்த இந்த போட்டிகளில், மாநில மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து, 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் விளையாடினர்.மாணவர்களுக்கான போட்டியில் பெர்க்ஸ் பள்ளியும், திண்டுக்கல் சி.எஸ்.எம்.ஏ., பள்ளியும் மோதியதில், 67 - 59 என்ற புள்ளி கணக்கில், பெர்க்ஸ் பள்ளி வெற்றி பெற்றது.திண்டுக்கல் எம்.எஸ்.பி., பள்ளியும், நேஷனல் மாடல் பள்ளியும் மோதியதில், 61 - 18 என்ற புள்ளி கணக்கில், எம்.எஸ்.பி., பள்ளி வெற்றி பெற்றது.பி.எஸ்.ஜி., சர்வஜன பள்ளியும், சென்னை வேலம்மாள் பள்ளியும் மோதியதில் 59-18 என்ற புள்ளி கணக்கில், சென்னை வேலம்மாள் பள்ளி வெற்றி பெற்றது.மாணவிகளுக்கான போட்டியில் விஸ்வதீப்தி பள்ளியும், எஸ்.பி.ஜி.வி., பள்ளியும் மோதியதில் 22-10 என்ற பள்ளி கணக்கில், விஸ்வதீப்தி பள்ளி வெற்றி பெற்றது.திண்டுக்கல் எம்.எஸ்.பி., பள்ளி, சுகுணா பிப் பள்ளி மோதியதில், 79-27 என்ற புள்ளி கணக்கில் எம்.எஸ்.பி., பள்ளியும், பெர்க்ஸ் பள்ளி, சென்னை வேலம்மாள் பள்ளி மோதியதில் 60 - 62 என்ற புள்ளி கணக்கில், வேலம்மாள் பள்ளியும் வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை