பாரதியார் பல்கலை 18ல் இளநிலை தேர்வு
கோவை ; உறுப்பு கல்லுாரிகளுக்கான, இளநிலை தேர்வுகள் வரும், 18ம் தேதி துவங்கும் என, பாரதியார் பல்கலை அறிவித்துள்ளது.பாரதியார் பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள 133 உறுப்புக் கல்லுாரிகளில், பி.எஸ்சி., பி.எ., பி.காம்., ஆகிய பாடப்பிரிவுகளுக்கு பருவத்தேர்வுகள் வரும், 18ம் தேதி துவங்க உள்ளதாக பல்கலை அறிவித்துள்ளது. இதற்கான பட்டியல் https://b-u.ac.inஎன்ற பல்கலை இணையதளம் வெளியிடப்பட்டுள்ளது.மொழிப்பாடங்களுக்கு தேர்வுகள் முடிந்த பின் பிற தேர்வுகள் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.