உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாரதியார் பல்கலை தடகள போட்டிகள் நிறைவு; அபாரமாக விளையாடிய வீரர், வீராங்கனைகள்

பாரதியார் பல்கலை தடகள போட்டிகள் நிறைவு; அபாரமாக விளையாடிய வீரர், வீராங்கனைகள்

கோவை; பாரதியார் பல்கலை, 42வது தடகள போட்டியில், 61 கல்லுாரிகளை சேர்ந்த, 590 வீரர், வீராங்கனைகள் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தினர்.பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே, 42வது தடகள போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் கடந்த மூன்று நாட்கள் நடந்தன. இதில், கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோட்டை சேர்ந்த, 61க்கும் அதிகமான கல்லுாரிகளை சேர்ந்த 320 மாணவர்கள், 270 மாணவியர் பங்கேற்றனர்.பெண்களுக்கான, 20 கி.மீ., நடை போட்டியில், சந்தியா, காவியா, சாலினி ஆகியோரும், ஆண்களுக்கான போட்டியில், பிரனேஷ், தனுஷ், சல்மான் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். ஆண்களுக்கான, 21 கி.மீ., அரை மாரத்தான் போட்டியில் நவீன் பிரபு, பாண்டி, கபிலன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.குண்டு எறிதலில், தீபிகா, ஸ்ரீநிதி, புவனேஸ்வரி ஆகியோரும், 400 மீ., ஓட்டத்தில் ஸ்ரீவர்தனி, ஏன்னே ஸ்மிலின், ராஜஜெய வர்சினி ஆகியோரும், 1500 மீ., ஓட்டத்தில் ஹேமதி, தேவர்சினி, மவுலீஸ்வரி ஆகியோரும், ஈட்டி எறிதலில் தீபா, நேகாஸ்ரீ, மகாதேவி ஆகியோரும், முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.ஆண்களுக்கான 'போல்வால்ட்' போட்டியில் ஹரிஹரன், திருபாகரன், விக்னேஷ் ஆகியோரும், வட்டு எறிதலில் பரணிதரன், கோகுல், விவேக் ஆகியோரும், 100 மீ., ஓட்டத்தில் சாம் வசந்த், கிஷோர், தருண் ஆகியோரும், 400 மீ., ஓட்டத்தில் வனமுத்து, அபினேஷ், குருதீப் ஆகியோரும், 1,500 மீ., ஓட்டத்தில் யோகேஸ்வர், ஜெபகுமார், சந்துரு ஆகியோரும் முதல் மூன்று இடங்களை வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை