உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாரதியார் பல்கலை பெண்கள் கபடி; ரத்தினம் கல்லுாரி அணி அபாரம்

பாரதியார் பல்கலை பெண்கள் கபடி; ரத்தினம் கல்லுாரி அணி அபாரம்

கோவை: பெண்களுக்கான கபடி போட்டியில் ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரி அணி முதலிடம் பிடித்தது.பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே பெண்களுக்கான கபடி போட்டி (சி-மண்டலம்) ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது. 13 அணிகள் பங்கேற்ற நிலையில், முதல் அரையிறுதியில், ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரி அணி, 24-6 என்ற புள்ளி கணக்கில் அக்சயா கல்லுாரி அணியை வென்றது.இரண்டாம் அரையிறுதியில், என்.ஜி.எம்., கல்லுாரி அணி, 36-11 என்ற புள்ளி கணக்கில் கமலம் கல்லுாரி அணியை வென்றது. இறுதிப்போட்டியில், ரத்தினம் கல்லுாரி அணி, 42-24 என்ற புள்ளி கணக்கில் என்.ஜி.எம்., அணியை வென்று முதலிடம் பிடித்தது. கமலம் கல்லுாரி அணி, 36-9 என்ற புள்ளி கணக்கில் அக்சயா கல்லுாரி அணியை வென்றது.வெற்றி பெற்றவர்களுக்கு ரத்தினம் குழும நிறுவனங்களின் தலைவர் மதன் பரிசுகள் வழங்கினார். உதவி உடற்கல்வி இயக்குனர் ரமேஷ் உள்ளிட்டோர் போட்டிகளை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை