உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காலிறுதியில் தவறவிட்ட பாரதியார் பல்கலை; அணியின் பயிற்சியை தீவிரப்படுத்த முடிவு

காலிறுதியில் தவறவிட்ட பாரதியார் பல்கலை; அணியின் பயிற்சியை தீவிரப்படுத்த முடிவு

கோவை; தென் மண்டல பல்கலைகளுக்கு இடையேயான, பெண்கள் வாலிபால் காலிறுதி போட்டியில், பாரதியார் பல்கலை வெற்றி வாய்ப்பை இழந்தது.சென்னை ஜே.பி.ஆர்., பல்கலையில், தென் மண்டல பல்கலைகளுக்கு இடையே, பெண்களுக்கான வாலிபால் போட்டி, ஐந்து நாட்கள் நடந்தது. இதில், 74 பல்கலை அணிகள் பங்கேற்றன. பாரதியார் பல்கலை அணி, கோனேரு லக் ஷமய்யா கல்வி நிறுவனத்தை, 25-2, 25-5, 25-3 என்ற புள்ளி கணக்கில் வென்றது. தொடர்ந்து, தெலுங்கானா கே.என்.ஆர்., ஹெல்த் சயின்ஸ் பல்கலையை, 25-2, 25-0, 25-0 என்ற புள்ளி கணக்கிலும், மகாத்மா காந்தி பல்கலையை, 25-10, 25-0, 25-0 என்ற புள்ளி கணக்கிலும், கர்நாடக மாநிலம் அக்காமஹாதேவி பெண்கள் பல்கலையை, 25-3, 25-5, 25-5 என்ற புள்ளி கணக்கிலும் வென்றது.காலிறுதிக்கு முந்தைய சுற்றில், பாரதிதாசன் பல்கலையை, 25-12, 25-14, 25-8 என்ற புள்ளி கணக்கில் வென்றது.காலிறுதிப் போட்டியில், கோழிக்கோடு பல்கலையுடன், பாரதியார் பல்கலை மோதியது. நிறைவில், 25-19, 25-20, 25-17 என்ற புள்ளிக்கணக்கில், பாரதியார் பல்கலை அணியினர் போராடி தோற்றனர்.வரும் போட்டிகளில் பயிற்சியை மேலும் தீவிரப்படுத்த, பல்கலை உடற்கல்வி துறை முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை