உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாரதிய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட மாநாடு

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட மாநாடு

கோவை; பாரதிய அஞ்சல் ஊழியர்கள் சங்க, அஞ்சல் 3 மற்றும் அஞ்சல் 4 சார்பில், மூன்றாவது கோட்ட மாநாடு, கோவை தலைமை தபால் அலுவலகத்தில் நடந்தது. அஞ்சல் 3 மாநில செயலாளர் மைக்கேல் ராஜ் முன்னிலை வகித்தார். பி.எம்.எஸ்., மாநில பொதுச் செயலாளர் சங்கர், மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். மாநாட்டில், 'எட்டாவது ஊதிய குழு அமைக்க வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிலுவையிலுள்ள 18 மாத அகவிலைப்படி வழங்க வேண்டும்' என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அஞ்சல் 3 புதிய தலைவராக ராமசாமி, கோட்ட செயலாளராக சுந்தரமூர்த்தி தேர்வு செய்யப்பட்டனர். அஞ்சல் 3 மாநில தலைவர் கண்ணன், அமைப்பு செயலர் ராமசாமி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை