உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெள்ள தடுப்பு சுவர் அமைக்க பூமி பூஜை

வெள்ள தடுப்பு சுவர் அமைக்க பூமி பூஜை

மேட்டுப்பாளையம்:காரமடை மருதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதி போயர் காலனி கட்டாஞ்சி மலை அருகே உள்ளது. மழை காலங்களில் கட்டாஞ்சி மலையில் வரும் மழை நீர், அருகில் உள்ள காடுகளில் இருந்து வரும் மழை நீர் இந்த காலனியில் உள்ள மழைநீர் வடிகால் வழியாக சாலையூர் பள்ளம் செல்கிறது. இதனிடையே மழை அதிகம் பெய்யும் போது, நீர்வரத்து அதிகரித்து மழைநீர் போயர் காலனி குடியிருப்புகளுக்குள் சென்று விடுகிறது.சமீபத்தில் பெய்த மழையில் இப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் சென்று, பொருட்கள் சேதம் அடைந்தன. மேலும் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளும் அடித்து செல்லப்பட்டன. இங்கு வெள்ள தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து மருதுார் ஊராட்சி சார்பாக போயர் காலனியில் 150 மீட்டர் தூரம் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில், மழைநீர் வடிகால் மற்றும் வெள்ள தடுப்பு சுவர் அமைக்கும் பணி நேற்று துவங்கியது.இதற்கான பூமி பூஜையில், ஊராட்சி தலைவர் பூர்ணிமா, துணை தலைவர் தேன்மொழி, செயலாளர் லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை