உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலையில் பெரிய பள்ளம்; தற்காலிகமாக சீரமைப்பு தினமலர் செய்தி எதிரொலி  

சாலையில் பெரிய பள்ளம்; தற்காலிகமாக சீரமைப்பு தினமலர் செய்தி எதிரொலி  

பொள்ளாச்சி : அண்ணா நகர் மேடு முதல் ஆச்சிபட்டி வரையிலான சாலையில், பெரிய அளவிலான குழிகள் ஏற்பட்ட நிலையில், தற்காலிகமாக பேட்ஜ் ஒர்க் செய்து சீரமைக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கிய வழித்தடம், நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இவ்வழியே, தினமும், லட்சக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன.இருப்பினும், அண்ணாநகர் மேடு முதல், ஆச்சிப்பட்டி வரையிலான சாலை, மிகவும் மோசமாகவே உள்ளது. ஏற்கனவே, இந்த சாலை, மேடு பள்ளமாக இருப்பதால், வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகி வந்தன.இச்சூழலில், சமீபத்தில் பெய்த கனமழையால், சாலையில் பெரும் பள்ளங்கள் உருவாகின. வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பு கருதி, விரைந்து சீரமைக்க வேண்டும் என, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, அந்த சாலையில், தற்காலிகமாக பேட்ஜ் ஒர்க் செய்து, சீரமைக்கப்பட்டுள்ளது.வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், 'இந்த சாலை, போதிய பராமரிப்பின்றி பல இடங்களில் சிதைந்து, குண்டும், குழியுமாக மாறி வாகன ஓட்டுநர்களை பாதிப்பு அடையச் செய்கிறது. முழுமையாக சாலையை புதுப்பிக்க வேண்டும். சாலையில், 'யு டேர்ன்' பகுதிகளில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு அமைக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை