உள்ளூர் செய்திகள்

இருசக்கர வாகன பேரணி

பெ.நா.பாளையம்;தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாளையொட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட, 20க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று விழா நடந்தது. இதில், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார் பங்கேற்று கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ராக்கிபாளையம், பூச்சியூர், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் இரு சக்கர வாகன பேரணி நடந்தது. இதில், அ.தி.மு.க., பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆனந்தன், கவுன்சிலர் சிவக்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை