பைக் திருடர்கள் வசமாக சிக்கினர்
கோவை : வடகோவை, எம்.டி.பி., ரோட்டை சேர்ந்தவர் நாச்சிமுத்து, 21; கல்லூரி மாணவர். சம்பவத்தன்று வீட்டின் முன், தனது பைக்கை நிறுத்தியிருந்தார். அப்போது, இருவர் பைக்கை திருடிக் கொண்டு தப்பி செல்ல முயன்றுள்ளனர். அதைப்பார்த்து நாச்சிமுத்து சத்தம் போட, அருகில் இருந்த பொது மக்கள், திருடர்களை மடக்கி பிடித்தனர். இருவரையும் ஆர்.எஸ்.புரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், பைக்கை திருடியவர்கள் கோவை நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்த தனசேகரன், 27, திருவள்ளூரை சேர்ந்த அமர்நாத், 25 என்பது தெரியவந்தது.இதில், தனசேகரன் வழக்கு ஒன்றில் கைதாகி, சிறையில் இருந்து ஐந்து நாட்களுக்கு முன் தான் வெளிவந்தது தெரியவந்தது. போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.