பா.ஜ., சார்பில் அஞ்சலி கண்டன ஆர்ப்பாட்டம்
போத்தனூர் : காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணியர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை கண்டித்து, ஆர்ப்பாட்டம் மற்றும் உயிரிழந்தோருக்கு, அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் சுந்தராபுரம், சங்கம் வீதியில் நடந்தது.தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். விவசாயிகள் அணி மாநில செயலாளர் குமரேசன், சிறுபான்மை அணி மாநில துணை தலைவர் ஜான்சன், தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் வசந்தராஜன், சுந்தராபுரம் மண்டல் தலைவர் முகுந்தன் மற்றும் 35 பெண்கள் உள்பட, 150 பேர் பங்கேற்றனர்.