உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பா.ஜ. இலக்கிய அணி கூட்டம்

 பா.ஜ. இலக்கிய அணி கூட்டம்

அன்னூர்: -: பா.ஜ. தமிழ் இலக்கியம் மற்றும் வளர்ச்சி பிரிவில், மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் கணேசபுரத்தில் நடந்தது. கோவை வடக்கு மாவட்ட தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். மாநில இணை அமைப்பாளர் கண்ண பரமாத்மா பேசுகையில், தமிழ் மொழி மீது பிரதமர் மோடி மிகுந்த பற்று கொண்டுள்ளார். தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை அறிவித்து வருகிறார். தமிழின் மேன்மை குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும், என்றார். ஒன்றிய அளவில் நிர்வாகிகள் நியமிப்பது, குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவது, தமிழ் இலக்கியத்தில் போட்டிகள் நடத்துவது ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மாநில செயலாளர் கோபால கிருஷ்ணன், மாவட்ட இணை அமைப்பாளர் முகுந்தன், செயலாளர் விமல்ராஜ், பூங்கொடி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி