உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வாஜ்பாய் பிறந்தநாள் விழா நல்லாட்சி அமைய பா.ஜ. உறுதி

 வாஜ்பாய் பிறந்தநாள் விழா நல்லாட்சி அமைய பா.ஜ. உறுதி

சூலூர்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளில், தமிழகத்திலும் நல்லாட்சி அமைத்திட, பா.ஜ. வினர் உறுதி ஏற்றனர். சூலூர் கிழக்கு மண்டல பா.ஜ,. சார்பில், முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாள், 10 இடங்களில் கொண்டாடப்பட்டது. முன்னாள் மண்டல தலைவர்கள் அசோக், ரவிச்சந்திரன், ரவிக்குமார், பொதுச்செயலாளர் மகேஷ்வரன் மற்றும் தொண்டர்கள், வாஜ்பாயின் திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். வாஜ்பாய் அரசின் சாதனைகள் குறித்து விளக்கப்பட்டது. பொக்ரானில் அணுகுண்டு வெடிப்பு சோதனை, தங்க நாற்கர சாலைகள் அமைக்கப்பட்டது, வெளிநாடுகளுடன் இருந்த நட்பு குறித்து நிர்வாகிகள் பேசினர். தமிழகத்திலும் நல்லாட்சி அமைத்திட, நிர்வாகிகள், தொண்டர்கள் உறுதி ஏற்றனர். இதேபோல், கருமத்தம்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில், சூலூர் சட்டசபை தொகுதி பார்வையாளர் மோகன் மந்திராஜலம், நகர தலைவர் பிரகாஷ் மற்றும் தொண்டர்கள், வாஜ்பாயின் திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை