மேலும் செய்திகள்
திருச்சி ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
14-Oct-2024
அ ந்த காலத்து சினிமா பாடல்கள் கவித்துவமும், இலக்கிய ரசமும் கொண்டவை. ஒரு பழைய பாடலை, தன் குரலில் தானே பாடி ரசித்துக் கொள்பவர்கள் அதிகம். கருப்பு - வெள்ளை சினிமா படங்கள், மக்கள் மனதுக்குள், பல வண்ணக் கனவுகளை உருவாக்கின.அந்த கனவுகளின் பிரதியாக, கோவை சாயிபாபா காலனியை சேர்ந்த கவிஞர் சுபா, ஆறு கவிதை நுால்களை எழுதி இருக்கிறார். இப்போது சினிமா பாடல்கள் குறித்து, 'காலத்தை வென்ற கானங்கள்', 'சங்கீத ஸ்வரங்கள்' என்ற, இரு கட்டுரை நுால்களை எழுதி இருக்கிறார். ''சினிமா பாடல்கள் தான், இசையை எல்லோருக்கும் சொந்தமாக்கின,'' என்கிறார் கவிஞர் கோவை சுபா. இவரது இயற்பெயர் சு.பாலகிருஷ்ணன். அவரை சந்தித்து பேசிய போது, சினிமா பாடல்கள் மீதான தனது ஈடுபாடு மற்றும் ரசிப்புத் தன்மை குறித்து பகிர்ந்து கொண்டார்.''சிறு வயதில் சினிமாப் பாடல்களை, இலங்கை வானொலியில் கேட்டு ரசித்திருக்கிறேன். எனது நண்பர்களுடன் சேர்ந்து பாட்டுப் புத்தகத்தை பார்த்து, பாடி மகிழ்வேன். யார் பாடியது என தெரியாது. சிவாஜி, எம்.ஜி.ஆர்., பத்மினி, சாவித்திரி பாடியதாக நம்பிய காலம் அது.நல்ல சினிமாக்களை ஒருமுறை அல்லது இருமுறை பார்ப்போம். ஆனால், பிடித்த சினிமா பாடல்களை பல முறை கேட்டுக்கொண்டிருப்போம்.நான், எனது சிறுவயதில் கேட்ட பாடல்களை இப்போதும் விரும்பி கேட்கிறேன். சினிமா பாடல்கள் வந்த பிறகுதான், இசை எல்லோருக்கும் சொந்தமானது. இந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த பாடல்கள் மட்டுமல்ல, எல்லோருக்கு பிடித்த பாடல்கள் பற்றி எழுதி இருக்கிறேன். பழைய பாடல்களை கேட்கும்போது, நமக்குள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படும். கர்நாடக இசையை எளிமையாக்கி, பாமரர்களும் கேட்டு மகிழ்ந்திட வேண்டும் என்ற எண்ணத்தில், அன்றைய இசை அமைப்பாளர்கள் உருவாக்கினர்.கண்ணதாசன், பட்டுக்கோட்டை அழகிரி போன்ற கவிஞர்கள் பாடல்களை மக்கள் இலக்கியமாக மாற்றினர். சினிமா என்பது வெறும் பொழுதுபோக்குச் சித்திரம் மட்டுமல்ல; பல கலைஞர்களின் ஆற்றலும், திறமையும் நிறைந்த கலை; உன்னதமான கலை வடிவம். அதற்கான சான்றுகள் தான் இந்த நுால்கள்,'' என்கிறார் கவிஞர் சுபா.
14-Oct-2024