மேலும் செய்திகள்
தாகூர் அரசு கல்லுாரியில் ரத்த தான முகாம்
02-Apr-2025
பொள்ளாச்சி,; பொள்ளாச்சி அருகே மணக்கடவு வாணவராயர் வேளாண்மை கல்லுாரியின் நாட்டுநலப்பணித்திட்டம், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை சார்பில், ரத்த தான முகாம், கல்லுாரியின் மத்திய பண்ணை வளாகத்தில் நடந்தது.பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் மாரிமுத்து, பெரியபோது ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஹரிஹரசுதன், சுகாதார ஆய்வாளர் கோகுல் பிரசாத், செவிலியர்கள் அடங்கிய குழுவினர் மாணவர்களிடம் இருந்து ரத்ததானம் பெற்றனர். நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள், 55 பேர், கல்லுாரி பேராசிரியர்கள் 16 பேர் ரத்ததானம் செய்தனர்.நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தாமோதரன், முனைவர் கார்த்திகா, முனைவர் சங்கரராமன், முனைவர் நவீன், நாட்டுநலப்பணித்திட்ட பிரதிநிதிகள் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
02-Apr-2025