கோதவாடி குளத்தில் படகு சவாரி துவங்கணும்
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, கோதவாடி குளத்தை சுற்றுலா பகுதியாக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்துகின்றனர். கிணத்துக்கடவு அருகே, கோதவாடி குளம் 384 ஏக்கரில் உள்ளது. இந்த குளம் பொள்ளாச்சி --- கோவை இடைப்பட்ட பகுதியில் இயற்கை சூழ்ந்த வளமான பகுதியாக உள்ளது. இப்பகுதியை சுற்றுலா தலமாக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் குளம் முழுவதும் நீர் நிரம்பிய போது, ஆழியாறு, வால்பாறை போன்ற இடங்களுக்கு செல்பவர்கள் இப்பகுதியை பார்வையிட்டு சென்றனர். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் கோதவாடி குளத்தை சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார். எனவே, பி.ஏ.பி. உபரி நீரை குளத்தில் நிரப்பி, படகு சவாரி துவங்கினால் சுற்றுலா பயணியர் வருகை அதிகரிக்கும். இதற்கான திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.