போத்தீஸ் ஸ்லோகன் வெற்றியாளர்களுக்கு பரிசு
கோவை; போத்தீஸ் சூப்பர் ஸ்டோர்சின், 12 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஸ்லோகன் கான்டெஸ்ட் போட்டியில் குலுக்கல் முறையில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.சுமார், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. சூப்பர் பம்பர் பரிசாக ராயல் என்பீல்டு புல்லட் பைக்கை, ஆலந்துறையை சேர்ந்த சந்தியா ஸ்ரீ வென்றார்.மேலும் ஹீரோ பிளசர் பைக், வாஷிங் மெசின், பிரிட்ஜ், மிக்சர் கிரைண்டர், மொபைல் போன், டிவி, மிக்சி போன்ற ஏராளமான பரிசு பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. பரிசுகளை போத்தீஸ் நிர்வாக இயக்குனர் அசோக் வழங்கினார். நிகழ்வில், போத்தீஸ் துணை தலைவர் சக்தி நாராயணன், சூப்பர் ஸ்டோர் சீனியர் மேனேஜர் சபரீஸ்வரன் மற்றும் சூப்பர் ஸ்டோர்ஸ் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.