உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கோவை டவுன்ஹால் மணிக்கூண்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

 கோவை டவுன்ஹால் மணிக்கூண்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை: கோவை மணிக்கூண்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து நள்ளிரவில் போலீசார் சோதனை நடத்தினர். கோவை டவுன்ஹால் பகுதியில், மாநகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள மணிக்கூண்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்றிரவு இ-மெயிலில் மிரட்டல் வந்தது. இதையடுத்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் அது புரளி எனத் தெரிந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி