| ADDED : நவ 20, 2025 05:38 AM
கோவை: கலெக்டர் அலுவலகத்துக்கு, இ-மெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டலில், மோடி கோவை வருகையின் போது, குண்டுவெடிப்பை செயல்படுத்தப்போகிறோம் என்று குறிப்பிடப்பட்டிருந்ததால், ஊழியர்களும், போலீசாரும் பதட்டமடைந்து பாதுகாப்பை பலப்படுத்தினர். ஊழியர்கள் மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனருக்கு தகவல் கொடுத்தனர். உடனே வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு மெட்டல் டிடெக்டர் கருவியுடன் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதி, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் தீவிர சோதனை நடத்தினர். பிரதமர் பங்கேற்ற கொடிசியா கண்காட்சி அரங்கு மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.