உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி மாணவருக்கு பாக்சிங்கில் பதக்கம்

பள்ளி மாணவருக்கு பாக்சிங்கில் பதக்கம்

கோவை: தருமபுரியில் நடந்த மாநில அளவிலான பாக்ஸிங் போட்டியில், மதர்லேண்ட் பள்ளி மாணவர் தங்கம் வென்றார். பள்ளிக்கல்வித்துறையின் மாநில அளவிலான பாக்ஸிங் போட்டி, தருமபுரி மாவட்டத்தில் நடந்தது. இப்போட்டியில் மாவட்ட அளவிலான போட்டியில், முதலிடம் பிடித்த மாணவர்கள் பங்கேற்றனர்.கோவை மாவட்ட அளவில் நடந்த போட்டியில் பங்கேற்ற, மதர்லேண்ட் பள்ளி மாணவர்கள் 10 பேர் முதலிடம் பிடித்து, மாநில போட்டிக்கு தேர்வாகினர். இந்நிலையில், மதர்லேண்ட் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் நித்திஷ் என்ற மாணவர்கள் மாநில போட்டியில், சிறப்பாக செயல்பட்டு தங்கப்பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவரை, மதர்லேண்ட் பள்ளி தாளாளர் சீதா, டி.ஏ., ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் தெய்வசிகாமணி ஆறுமுகம் உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ