உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீட்டினுள் புகுந்து நகை பறிப்பு

வீட்டினுள் புகுந்து நகை பறிப்பு

போத்தனுார்; கோவை, குனியமுத்தூரிலுள்ள திருநாவுக்கரசு நகரை சேர்ந்தவர் பிருந்தா பெனிட், 29. நேற்று முன்தினம் வீட்டின் ஹாலில் அமர்ந்து, அலுவலக பணி செய்து கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்து உள்ளே நுழைந்த மர்ம நபர், பிருந்தா பெனிட் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க தாலியை பறித்துச் சென்றார். அதிர்ச்சியடைந்த பிருந்தா பெனிட் சத்தமிடவும், மீண்டும் உள்ளே வந்த மர்ம நபர், அவரை ஒரு அறையினுள் தள்ளி ஜன்னலை சாத்தினார். ஹாலின் கதவை வெளிப்புறமாக பூட்டி தப்பினார். பிருந்தா பெனிட் புகாரில், குனியமுத்தூர் போலீசார் மர்மநபரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை