மேலும் செய்திகள்
கே.எம்.சி.ஹெச்.ல் மார்பக புற்றுநோய் பரிசோதனை
03-Oct-2025
கோவை; மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, கங்கா மருத்துவமனையில் ஐந்தாவது ஆண்டாக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது. 'பி' பிளாக், தரைத்தளத்தில், கங்கா மார்பக பராமரிப்பு மையத்தின் முன்பாக நடந்து வருகிறது. இக்கண்காட்சியை, கங்கா மருத்துவமனை தலைவர் கனகவல்லி துவக்கி வைத்தார். மார்பக புற்றுநோயின் அறிகுறிகள், ஆரம்பத்திலேயே கண்டறியும் முறைகள், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தாமாகவே மார்பக பரிசோதனை செய்வது, 40 வயதுக்கு மேற்பட்டோர் ஆண்டுக்கு ஒருமுறை மோமோகிராம் பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம் விளக்கப்பட்டுள்ளது. முக்கிய அம்சமாக, மார்பக புற்றுநோய்க்கு பிந்தைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும், நவீன மைக்ரோ சர்ஜரி முறையின் விளக்கம் இடம் பெற்றுள்ளது. மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ராஜா சபாபதி, மார்பக புற்றுநோய் மறுவாய்ப்பாட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜா சண்முககிருஷ்ணன் பங்கேற்றனர்.
03-Oct-2025