உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம்

மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ரோட்டரி சங்கம் மற்றும் எஸ்.டி.சி., கல்லுாரி சார்பில் மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறிவதற்கான பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. கல்லுாரி வளாகத்தில் நடந்த முகாமிற்கு, ரோட்டரி சங்க தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் சுமலா, எஸ்.டி.சி., கல்லுாரி முதல்வர் வனிதாமணி ஆகியோர் கலந்து கொண்டனர். அதன்படி, 34 பேருக்கு மெமோகிராம், 70 பேருக்கு பாப் ஸ்மியர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசோதனைகள் இலவசமாக அளிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை