உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புக்ரா பல்துறை சிறப்பு மருத்துவமனை திறப்பு

புக்ரா பல்துறை சிறப்பு மருத்துவமனை திறப்பு

சூலுார்; கோவை அருகே இருகூர் எல் அண்டு டி பை பாஸ் ரோட்டில், 'புக்ரா' எனும் பல்துறை சிறப்பு மருத்துவமனையின் திறப்பு விழா நேற்று நடந்தது.கோவை, ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் 'ஹார்ட் பவுண்டேஷன் மருத்துவமனை' சார்பில், இருகூர் எல் அண்டு டி பை பாஸ் ரோட்டில் 'புக்ரா' என்கிற பல்துறை சிறப்பு மருத்துவமனை புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது. கொ.ம.தே.க., பொதுச்செயலாளரான, எம்.எல்.ஏ., ஈஸ்வரன் திறந்து வைத்தார்.எம்.பி.,க்கள் ராஜ்குமார், ஈஸ்வரசாமி, மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன், கோவை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் நிர்மலா, இ.எஸ்.ஐ., மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் ரவீந்திரன், இருகூர் பேரூராட்சி தலைவர் சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.'புக்ரா' பல்நோக்கு சிறப்பு மருத்துமனை நிறுவனர் டாக்டர் ராஜேந்திரன், இயக்குனர் இளங்கொடி ஆகியோர் கூறியதாவது:புக்ரா மருத்துவமனையில், 150 படுக்கை வசதிகள், அதிநவீன ஆய்வு கூடங்கள், அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளன. 24 மணி நேர அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, இதயம், எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று சிகிச்சை, மகப்பேறு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவம், உயர் தர கருத்தரித்தல் மையம், பொது மருத்துவம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல துறை சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ