உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சேரன் மாநகரில் இருந்து மருதமலைக்கு பஸ்

சேரன் மாநகரில் இருந்து மருதமலைக்கு பஸ்

கோவை: கொரோனா தொற்றுக்கு பிறகு, சேரன் மாநகர் முதல் மருதமலை செல்லும் 92 என்ற எண்ணுள்ள பஸ் தற்போது வரை இயக்குவதில்லை. இதற்கான காரணம் என்ன, இயக்க வேண்டாம் என அரசாணை உள்ளதா என, விளாங்குறிச்சி ரோடு விக்னேஷ் நகரை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசு போக்குவரத்து கழகத்திடம் கேள்வி கேட்டார். அதற்கு, 'உயர்மட்ட குழு ஆலோசனைப்படி, வசூல் குறைவான பஸ்களை இயக்க தடை செய்யப்பட்டு உள்ளது; அரசாணை வெளியிடவில்லை. 92 மற்றும் 9 ஆகிய எண்கள் கொண்ட இரண்டு பஸ்கள் சேரன் மாநக ரில் இருந்து விளாங்குறிச்சி ரோடு வழியாக இயக்கப்பட்டன. அதில், 92 என்கிற சாதாரண பஸ் மீண்டும் இயக்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படு ம். சேரன் மாநகரில் இருந்து ஹோப் காலேஜ், காந்திபுரம், கணபதி, சரவணம்பட்டி, விளாங்குறிச்சி வழியாக சேரன் மாநகர் வந்தடையும் வகையில் பஸ்கள் இயக்க, வழித்தடத்தில் பயணிகளின் வருகை, சாலை வசதியை ஆய்வு செய்து பரிசீலிக்கப்படும்' என, அரசு போக்குவரத்து கழக வணிக துணை மேலாளர் பதிலளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை