மேலும் செய்திகள்
மின் தடை; பள்ளி மாணவர்கள் தவிப்பு
13-Mar-2025
அன்னுார்: மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அன்னுார் வழியாக சூலூருக்கு மீண்டும் பஸ் இயங்க துவங்கி உள்ளது. அன்னுார் நகர் மற்றும் அன்னுார் தெற்கு பகுதியில் உள்ள கரியாம்பாளையம், பிள்ளையப்பம் பாளையம், கணேசபுரம், பொன்னே கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர்கள், சூலூர் செல்வதற்கு காந்திபுரம் சென்று பஸ் மாறி செல்ல வேண்டி உள்ளது.அல்லது வாகராயம்பாளையம் வழியாக சோமனுார் சென்று அங்கிருந்து சூலூர் செல்ல வேண்டி உள்ளது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னுார், கரியாம்பாளையம், பொன்னே கவுண்டன் புதூர் வழியாக சூலூருக்கு தினமும் இரண்டு முறை தனியார் பஸ் இயங்கி வந்தது.கொரோனாவுக்கு பிறகு இந்த பஸ்ஸின் இயக்கம் நிறுத்தப்பட்டது. இதனால் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் சூலூர் செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில் மீண்டும் கடந்த வாரம் முதல் மேட்டுப்பாளையம், பொகலூர், அன்னுார், கரியாம்பாளையம், பொன்னே கவுண்டன்புதூர் வழியாக சூலூருக்கு பஸ் இயக்கம் துவங்கியுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
13-Mar-2025