உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் தர அழைப்பு

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் தர அழைப்பு

அன்னுார்; அக்கரை செங்கப்பள்ளியில், இன்று நடைபெறும் முகாமில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.தமிழக அரசு, 'உங்களுடன் ஸ்டாலின்' என்னும் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் ஜூலை 15 முதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில், 15 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், 46 சேவைகளை வழங்குகின்றனர். இன்று (15ம் தேதி) அன்னுார் ஒன்றியத்தில், அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சியில், காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை முகாம் நடைபெறுகிறது.'அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்று பயன் பெறலாம். வருகிற 25ம் தேதி கணுவக்கரையிலும், ஆக. 1ம் தேதி குப்பனுாரிலும், ஆக. 4ம் தேதி பொகலூரிலும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடைபெற உள்ளது,' என ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை