தேனீ வளர்க்கலாம் வாங்க விவசாயிகளுக்கு அழைப்பு
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு வட்டாரத்தில், தேனீ வளர்ப்புக்கு ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு மானியத்தில் தேனீ பெட்டி வழங்கப்படுகிறது.கிணத்துக்கடவு வட்டாரத்தில் பரவலாக விவசாயிகள் பலர் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில், கிணத்துக்கடவு வட்டார விவசாயிகளுக்கு, தேனீ வளர்ப்பு பெட்டி மானியத்தில் வழங்கப்படுகிறது.தற்போது, 100 பெட்டிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, 10 பெட்டிகள் வரை வழங்கப்பட உள்ளது. இதில், தேனீ வளர்ப்பு பெட்டி, தேனீக்கள், தேன் எடுக்கும் கருவி உள்ளிட்டவைகள் அடங்கும்.கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் உள்ள, கிராம விவசாயிகளுக்கு, 80 சதவீதமும், மற்ற கிராம விவசாயிகளுக்கு, 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும்.தேனீ வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகள், சிட்டா, அடங்கல், உரிமை சான்று, ஆதார் மற்றும் ரேஷன் கார்டு ஜெராக்ஸ், பேங்க் பாஸ் புக், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2 உள்ளிட்ட ஆவணங்களை வழங்கி பெற்றுக்கொள்ளலாம்.மேலும், திட்டம் குறித்த சந்தேகங்களுக்கு தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என, கிணத்துக்கடவு தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜமுனாதேவி தெரிவித்தார்.