மேலும் செய்திகள்
சிறுத்தையை பிடிக்க கூண்டு வச்சாச்சு!
29-Aug-2024
அன்னூர்: அன்னூர் அருகே சிறுத்தை வந்ததாக, மக்கள் புகார் கூறியதையடுத்து, வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா பொருத்தினர்.அன்னூர் -- கோவை சாலையில், எல்லப்பாளையம் பவர் ஹவுஸில், நேற்று முன்தினம் இரவு சிறுத்தை நடமாடியதாக, சிலர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர், அப்பகுதியில் ஆய்வு செய்தனர். சிறுத்தையின் கால் தடம் எதுவும் அங்கு பிடிபடவில்லை.எனினும், பொதுமக்கள் புகார் தெரிவித்ததால், வனத்துறையினர் எல்லப்பாளையம், ஆவாரம் குளத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தினர். அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.எனினும், சிறுத்தை நடமாட்டம் குறித்து, 'சிசி டிவி' கேமரா காட்சிகள் அல்லது கால் தடம் எதுவும் தெரியவில்லை. எனினும், தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
29-Aug-2024